ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் முறைமை அறிமுகம்

 
  மினுவாங்கொடை நிருபர் 

 
   நாட்டில் கொரோனா நெருக்கடியை அடுத்து, தற்போது மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
   இந்நிலையில், அத்தியவசியத் தேவைகளுக்காக ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை பொலிஸார் அறிமுகம் செய்துள்ளனர்.
   இதன்படி, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்திசெய்து அனுப்புவதன் மூலம் ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
   மேலும், ஊரடங்கு அனுமதிப்பத்திரங்கள்  அவசியமானவர்கள் secretary@mws.gov.lk 
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் ஊடாகவும் அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளச்முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்