தொழிற்துறைப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

 ( மினுவாங்கொடை நிருபர் )


   நாட்டின் தற்போதைய நிலையில், தொழிற்துறைகளை எந்தவிதத் தொய்வும் இன்றி தொடர்ந்தும் சீரான நிலையில் கொண்டு  செல்வதை நோக்காகக் கொண்டு, தொழிற்துறை சார்ந்தவர்களுக்கு அவசியமான சலுகைகளை வழங்க, தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 
   இதற்கமைய, தொழிற்துறை சார்ந்தவர்களின் பிரச்சினைகளை முன்வைக்க மூன்று தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 
   தொழிற்துறை சார் பிரச்சினைகளை அறிவிக்க பின்வருவோரைத் தொடர்புகொள்ள முடியும்.
   சிந்திக்க ஜயவர்தன, (பணிப்பாளர்) தொலைபேசி இலக்கம் - 
0713 976406, 
   தொழிற் பேட்டைகளுக்கு வெளியில் இருக்கும் தொழிற்துறை நிறுவனங்கள் குறித்து அறிவிப்பதற்கு, 
   ரசிக்க விஜயகோன், (பணிப்பாளர்) தொலைபேசி இலக்கம் -
0113 158114, 
   இறக்குமதி தொடர்பிலான  பிரச்சினைகளைத் தெரிவிக்க,
   சிதாரா ஜயசேன, (பணிப்பாளர்)
தொலைபேசி இலக்கம் - 0770820775 ஆகியவற்றைத்  தொடர்பு கொள்ள முடியும் என, தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )