சிலோன் மீடியா போரத்தின் "சர்வதேச ஊடக ஆய்வு மாநாடு" தொடர்பாக பேராசிரியர்களுடனான முதற்கட்ட கலந்துரையாடல்

 
 (நூருல் ஹுதா உமர்)


சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் விரைவில் நடைபெறவிருக்கும் "சர்வதேச ஊடக ஆய்வு மாநாடு" (International Media Sympocium) தொடர்பான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (10) தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் சர்வதேச ஊடக ஆய்வு மாநாடுக்கான தலைப்புக்கள்,ஒழுங்கமைப்பு, திட்ட வரைபு, நடாத்துவதற்கான காலம் மற்றும் இதர செயற்பாடுகள் உள்ளிட்ட நடப்பு விவகாரங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடாதிபதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், தென்கிழக்கு பல்கலைக்கழக அரசியல்துறை தலைவர் கலாநிதி எம்.எம்.பாசில், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.ஏ.பெளசர், சிலோன் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்