முன்பிருந்த வைரஸ்ஸிலும் பார்க்க தற்போதுள்ள வைரஸ் வீரியம் கூடியது; முல்லை மக்களே அவதானம்

 

 

விஜயரத்தினம் சவணன்


இலங்கையில் முதலாவது கொரோனாத்தொற்று அலைக்கு காரணமாகஇருந்த வைரஸ்ஸிலும் பார்க, தற்போது இரண்டாம் அலைக்குக் காரணமான வைரஸ் வீரியம் கூடியதாக உள்ளதாகவும், இதனால் தொற்றுக்கள் இலகுவில் பரவக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

எனவே முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தொற்றுக்கள் ஏற்படாதவாறு சுகாதாரவழிமுறைகளைப் பின்பற்றி அவதானமாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பணிமனையில் 31.10.2020 அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தல் இடம்பெற்ற ஆராட்சியில் இந்த வைரஸ்ஸானது முதல் அலயைின் வைரஸ்ஸிலும் பார்க்க மாறுபட்ட ஒரு வடிவத்திலுள்ளது.

முன்பிருந்த வைரஸ் தொற்றுக் குறைந்த வைரஸ் ஆகவும், தற்போதுள்ள வைரஸ் தொற்றுக் கூடிய வைரஸாகவும், வீரியம் கூடிய வைரஸாகவும் காணப்படுகின்றது.

அதனால் இலகுவில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றக்கூடிய ஆற்றல்கொண்டது. அதேபோன்று மக்கள் நெருக்கமாக இடங்களில், பேரூந்துக்களில் இலகுவில் பரவக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது.

மிக முக்கியமாக இரண்டாவது அலை கொரோனத் தொற்றில் பேலியகொடவில் ஏற்பட்ட கொத்தணியானது மிகப் பெரிய கொத்தணியாகும்.

அதேநேரம் மினுவாங்கொடவில் ஏற்பட்டகொத்தணிகள், இதனைத் தொடர்ந்து பல உப கொத்தணிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

அனைத்து உபகொத்தணிகளிலும் உள்ள வைரஸ்களும் ஒரே வைரஸ்களாகவே உள்ளதாக ஆராட்சிசெய்த விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். ஆகையினால் இம்முறை ஏற்பட்டுள்ள அனைத்து வைரஸ் தொற்றுக்களுமே ஒரே கொத்தணியிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டதாகஅவர்கள் கூறுகின்றார்கள்.

எது எவ்வாறாயினும் முன்பிருந்த வைரஸ்ஸிலும்பார்க தற்போதுள்ள வைரஸ்ஸின் வீரியம் அதிகம் என்பதால் மக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டிய காலம் இதுவெனத் தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.

மிக முக்கியமாக சந்தைகளில் கூட்டம்கூடுதல், அடைக்கப்பட்ட இடத்தில் சந்தைகளை வைத்தல், பேரூந்துக்களில் கூட்டமாக ஏறுதல், பொதுக்கூட்டங்களை அடைக்கப்பட்ட இடங்களில் நடாத்துதல் போன்றவற்றைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

அதேவேளை மக்கள் முக்கியமாக சுகாதார பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். சவர்காரம் மற்றும் தொற்றுநீக்கிகளைப் பயன்படுத்தி நன்றாக கைகழுவுதல், முக்கியமாக முகமூடியை முகத்தில் அணியாமல் முகத்தையும், மூக்கையும், வாயினையும் சரியான முறையில் மூடக்கூடியவாறு அணியவேண்டும். தும்மும்போது கையை மடக்கி தும்முதல் அல்லது கைக்குட்டையினைப் பயன்படுத்தல் மற்றும் சமூக இடைவெளியினைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளைக்கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்