இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் தெரிவு

 
 ( மினுவாங்கொடை நிருபர் )


   இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களிலிருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
   கடந்த வருடத்திலும் பார்க்க பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின்  எண்ணிக்கை 10000 இனால் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
   இதற்கமைவாக, மருத்துவ பீடத்திற்கு 371 பேரும், பொறியியல் பீடத்திற்கு 405 பேருமாக, மேலதிக மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்