2021 ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டி

 


 


 மினுவாங்கொடை நிருபர் )


   கொரோனாத் தொற்றின் காரணமாக, இவ்வாண்டு பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக, 2021 இல் விடுமுறைகள் குறைக்கப்பட்ட பாடசாலை நாட்காட்டி கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 
   சுற்றறிக்கை இல 33/2020 இன்படி நாட்காட்டி சிங்கள தமிழ் மற்றும் முஸ்ஸிம் பாடசாலைகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது. 
   சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகள்.

   முதலாம் தவணை.

(முதல் கட்டம்)
   2021 ஜனவரி 04 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜனவரி 15 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட),    க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக 16.01.2021 தொடக்கம் 31.01.2021 வரை விடுமுறை வழங்கப்படும்.

(இரண்டாம் கட்டம்)

   2021 பெப்ரவரி 01 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஏப்ரல் 09 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட),    இரண்டாம் தவணை.
   2021 ஏப்ரல் 19 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜுலை 30 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட),    மூன்றாம் தவணை.
   2021 ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை தொடக்கம் 
2021 டிசம்பர் 03 வௌ்ளிக்கிழமை வரை. 
   முஸ்லிம் பாடசாலைகள்.
முதலாம் தவணை.
(முதல் கட்டம்)
   2021 ஜனவரி 04 திங்கட்கிழமை தொடக்கம் 
2021 ஜனவரி 15 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட),
 (க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக 16.01.2021 தொடக்கம் 31.01.2021 வரை விடுமுறை வழங்கப்படும்),
இரண்டாம் கட்டம்.
   2021 பெப்ரவரி 01 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஏப்ரல் 09 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட),    இரண்டாம் தவணை. 
   2021 மே 17 திங்கட்கிழமை தொடக்கம் 
2021 ஆகஸ்ட் 25 புதன்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட),
    (2021 ஆகஸ்ட் 26,27 இரண்டு நாட்களும் விடுமுறை வழங்கப்படும்) 
மூன்றாம் தவணை..
   2021 ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை தொடக்கம் 
2021 டிசம்பர் 03 வௌ்ளிக்கிழமை வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்