கிராம நிலதாரிகளுக்கு கோவிட்-19 தொற்றுநீக்கிகள் வழங்கி வைப்பு.

                                               


 நூருள் ஹுதா உமர்


கோவிட்-19 தொற்று  காலப்பகுதிகளில் கிராம உத்தியோகத்தர்கள் பொதுமக்களுடனான தங்களது கடமைகளை தங்குதடையின்றி மேற்கொள்வதற்கு அவர்களது சுகாதார நடைமுறைகளை மேம்படுத்தும் வகையில் முகக்கவசம், கையுறை, தொற்று நீக்கி என்பன அடங்கிய பொதி காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களினால் இன்று வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன், கணக்காளர் செல்வி என்.ஜயசர்மிகா உட்பட கிராம நிலதாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்