இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 19 நாட்டு படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் கடலில் போராட்டம்

 

 


(க.கிஷாந்தன்)

 

இலங்கை கடற்படையால் கடந்த 2019ஆம் ஆண்டு சிறை பிடிக்கப்பட்ட 19 நாட்டு படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவ பெண்களும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்களும் பாம்பன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த 30 வருடங்களாக தாக்குதல் நடத்துவதும் படகுகளை சேதப்படுத்துவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது.

 

இந்த நிலையில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் நம்புதாளை பகுதியிலிருந்து கடந்த 2016ஆம் ஆண்டு மீன்பிடிக்க சென்ற 19 நாட்டுபடகுகளை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி பறிமுதல் செய்து தற்போது இலங்கையின் பல்வேறு கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.,  நான்கு வருடங்களாகியும் படகுகளை விடுதலை செய்யப்படாததால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மிகவும் வறுமையில் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர், 

 

எனவே பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாம்பன் தெற்கு கடல் பகுதியில் மீனவ பெண்களும் மீனவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்திற்கு பின்பு மத்திய மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்கவில்லையென்றால்  சென்னையில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தனர்.

 

பேட்டி - கருணாமூர்த்தி  - இராமேஸ்வரம்


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்