திருகோணமலை மாவட்டத்தில் 1061 சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வை

 


 ஹஸ்பர் ஏ ஹலீம்_திருகோணமலை மாவட்டத்தில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்ட 1061 குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற உலர் உணவுப்பொருட்கள் நேற்று(06) முதல் வீடுகளுக்கு சென்று சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி வழங்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோராள தெரிவித்தார்.


இரண்டாம் கட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் விபரங்கள் தற்போது கிரமமாக உரிய ஜனாதிபதி செயலணிக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் உடன் உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் இதன்போது அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவு மற்றும் கந்தளாய் பிரதேச செயலகப்பிரிவுகளில் நேற்று பிரதேச செயலாளர் தலைமையில் இவ்வுலர்உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்