திருகோணமலை மாவட்டத்தில் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 10.6 மில்லி மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

 

 எப்.முபாரக்  
திருகோணமலை மாவட்டத்தில் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களுக்கு  10.6 மில்லி மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிகோராள தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (06)   இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்து 61 குடும்பங்கள்  சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்குரிய நிதியினை ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும் பொலிசார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலின்படி அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று உலர் உணவு பொருட்களை வழங்க உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

மேலும் சுகாதார நடைமுறைகளைப்பேணி   நாளை சனிக்கிழமை முதல் திருகோணமலை பொது மீன் சந்தை  திறக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் மாவட்டத்தின் இயல்புநிலை கெடாத வகையில் சுகாதார திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக பொதுமக்கள் செயற்பட வேண்டும் எனவும் வைரசை ஒழிக்க அனைவரும் இத்தருணத்தில் பொறுப்புடன் செயற்படல் இன்றியமையாயதது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்