அட்டன் பகுதியில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 100 குடும்பங்களுக்கு உலர், உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகள் விநியோகம்

  (க.கிஷாந்தன்)

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் அட்டன் பகுதியில் சுயதனிமைக்கு  உட்படுத்தப்பட்டுள்ள 100 குடும்பங்களுக்கு தேவையான உலர், உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று (06.11.2020) விநியோகிக்கப்பட்டன.

10 ஆயிரம் ரூபா பெறுமதியான குறித்த நிவாரணப் பொதிகள்,  அட்டன் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு கிராம சேவகர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

முழுமையான சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று குறித்த உணவுப்பொதி கையளிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட செயலாளர் அலுவலகத்தின் ஆலோசனையின் பிரகாரம், அம்பகமுவ பிரதேச செயலாளர் அலுவலகத்தால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நுவரெலியா மாவட்ட உதவிச்செயலாளர், அட்டன் பொலிஸ் பிரிவுக்கான பொறுப்பதிகாரி, அட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மேலும் சிலர் நிவாரணத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்