லொறி வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து - இருவர் பலத்த காயம்
 (க.கிஷாந்தன்)

 

பூண்டுலோயா பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு நிறப்பூச்சி (பெயின்ட்) வகைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

பூண்டுலோயா – கொத்மலை பிரதான வீதியில் பாளுவத்த பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

10.11.2020 அன்று மதியம் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பூண்டுலோயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

 

விபத்து ஏற்பட்ட பகுதியில் லொறியின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி கொத்மலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.