மூதூரில் சுயதனிமைப்படுத்தப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

 

 ஹஸ்பர் ஏ ஹலீம்_மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் நெய்தல் நகர் கிராமத்தில் சுயதனிமைப்படுத்தப்பட்ட  100 குடும்பங்களுக்கு  தேவையான உலர் உணவுப்பொதிகள் மற்றும் சுகாதாரப்பாவணை பொருட்கள் இன்று (02)மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம் . முபாரக்கிடம்  அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.

கொவிட் 19 நோயாளர்கள் இக்கிராமத்தில் இனங்காணப்பட்டதனை தொடர்ந்து இங்கு பல குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட நிலையிலேயே இவ்வுலர் உணவுப்பொதிகள் இன்று பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க வழங்க வைக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசா தெரிவித்தார்.

இந்நிறுவனம் மாவட்டத்தில் பல சமூக மேம்பாட்டு அபிவிருத்தி செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலின் கீழ் இவ்வுதவிகள் குறித்த நிறுவனத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்