மேல்மாகாண பொருளாதார மத்திய நிலையங்கள் (04) திறப்பு

 
 ( மினுவாங்கொடை நிருபர் )


   மேல் மாகாணத்தில் தற்போது மூடப்பட்டுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும்,  (04) புதன்கிழமை திறக்கப்படவுள்ளதாக, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
   இதன்பிரகாரம், வெயாங்கொடை, வெலிசறை,  இரத்மலானை, நாரஹேன்பிட்டிய மற்றும்  போகந்தர ஆகிய பொருளாதார மத்திய நிலைய ஊழியர்களுக்கு, (04) பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
   இந்நிலையில், குறித்த பொருளாதார மத்திய நிலையங்களில் சில்லறை வரத்தக நடவடிக்கைகள் நடைபெற மாட்டாது. எனினும், மொத்த விற்பனையாளர்களுக்கு மாத்திரம்,  வாய்ப்புக்களை  வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்