பிரான்சில் இஸ்லாமியர்களுக்கு இனி அம்பேல்! Marine Le Pen எடுத்துள்ள தீவிர பிரச்சாரம்

 

 


  • பரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம்

இஸ்லாத்தை – இஸ்லாமிய சித்தாந்தத்தை பிரான்ஸின் எதிரியாகப் பிரகடணப்படுத்த வேண்டும் என Rassemblement National கட்சியின் தலைவி Marine Le Pen தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் பொது இடங்களில் முக்காடிடுவது முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டும்.

இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்குக் கிடைக்கும் நிதி நிறுத்தப்படவேண்டும்.

“எங்களுக்கு எதிராக ஒரு போர் நடத்தப்பட்டு வருகிறது, நாங்கள் இந்த யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும். நாங்கள் இந்த போரை ஒரு அரசுக்கு எதிராக அல்ல, ஒரு சித்தாந்தத்திற்கு எதிராக: இஸ்லாமியம் என்ற சித்தாந்தத்துக்கு எதிராக நடத்த வேண்டியவர்களாக உள்ளோம் என்றும் Marine Le Pen உணர்ச்சிபொங்கக் கூறியுள்ளார்.

“நாங்கள் போரில் இருந்தால், இந்த சித்தாந்தத்தை பிரான்சின் எதிரியாக அறிவிக்க வேண்டும்”,

2022ல் அதிபர் தேர்தல் வேட்பாளராகக் களமிறங்கவுள்ள Marine Le Pen இஸ்லாமிய சித்தாந்தம் மீது கடும் கோபம் அடைந்துள்ளார்.

இஸ்லாமிய சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் அமைப்புகள் மீதான தடை, இஸ்லாமிய தீவரவாத மசூதிகளை மூடுவது,

இஸ்லாத்தை ஆதரிக்கின்ற, இஸ்லாத்துக்காகப் பிரச்சாரம் செய்கின்ற வெளிநாட்டவர்களை உடனடியாக பிரான்ஸை விட்டு வெளியேற்ற வேண்டும்.

பிரான்ஸ் நாட்டின் குடியிரிமை உடைய இஸ்லாமியத் தீவிரவாதிகளின் பிரெஞ்சுப் பிரஜாவுரிமை பறிக்கப்படல் வேண்டும்.

இரட்டைக்குடியுரிமையுள்ள வரெனில் அவர்களை அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி விடல் வேண்டும்.

எனவும் Marine Le Pen இஸ்லாத்துக்கு எதிரான தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்