நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித் திட்டம் ஊடாக தம்பலகமத்தில் குளங்கள் புனரமைப்பு

  


ஹஸ்பர் ஏ ஹலீம்


நீர்ப்பாசன செழுமை திட்டத்தின் கீழ் சிறு குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் விவசாய நீர்ப்பாசன தொகுதிகளை மறு சீரமைக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் தம்பலகாமம் பிரதேச செயலகதில் இன்று(20 ) இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் 

 தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள கடவானை,சமனளக்குளம்,நீர்நாவல் மோட்டைக்குளம், பாலம்போட்டாறு அணைக்கட்டு, புலியூத்துக்குளம்,மூக்கரையான் குளம்,சேனாவளிக் குளம்,உள்பத்வெவ,இந்திவெவ, ஈச்சம்குளம்,குடா கல்மெட்டியாவ,பரவிபாஞ்சான் குளத்தின் வாய்க்கால் என்பன புனர்நிர்மாணம் செய்யப்பட முன்னுரிமைப்படுத்தப்பட்டன.


குறித்த கலந்துரையாடலில் தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி , திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரலவின் செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் ,தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியிலாளர், கமநல சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய சம்மேளன உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்கள்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்