முச்சக்கரவண்டி விபத்து - ஒன்றரை வயது குழந்தை பலி!

 

(க.கிஷாந்தன்)

 

அப்புத்தளை பகுதியில் விகாரகலை என்ற இடத்தில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒன்றரை வயது குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது. முச்சக்கரவண்டி சாரதி உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இவ்விபத்து, நேற்று (14.10.2020) பெரகலை – வெள்ளவாயா பிரதான வழியில் கீழ் விகாரகலை என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

 

சாரதி உட்பட ஆறுபேர் பயணித்த இவ் முச்சக்கரவண்டி, பாதையை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஸ்தலத்திலேயே பலியானார். ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கடுங்காயங்களுக்குள்ளாகி, அப்புத்தளை மற்றும் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

விபத்தில் படுகாயமுற்று ஆபத்தான நிலையிலுள்ள இருவர், தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனைய மூவர், அப்புத்தளை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்