வெளிநாட்டு புலனாய்வுத்துறையிடம் இருந்து கிடைத்த தகவல்கள்

 


 

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வுத்துறையிடம் இருந்து கிடைத்த தகவல்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் 3 உயரதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தன இந்த சாட்சியத்தை நேற்று வழங்கினார்.

காவல்துறை மா அதிபர் பூஜி;த் ஜெயசுந்தர, தேசிய புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் ரவி ஜெயவர்த்தன, சிறப்பு அதிரடிப்படையினரின் முன்னாள் தலைவர் எம் ஆர் லத்தீப் ஆகியோரிடம் இது தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக நிலந்த ஜெயவர்த்தன குறிப்பிட்டார்.

தாக்குதல்கள் தொடர்பான நம்பத்தகுந்த தகவல்கள் 2019 ஏப்ரல் 20ஆம் திகதி கிடைத்தன. அதேநேரம் ஏப்ரல் 4ஆம் திகதி வெளிநாட்டு புலனாய்வு பிரிவில் இருந்து கிடைத்த தகவலை அடுத்தே குறித்த அதிகாரிகளி;ன் கவனத்துக்கு அதனைக் கொண்டு சென்றதாக நிலந்த ஜெயவர்த்தன குறிப்பிட்டார்.

இதன்போது தாம் முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு அனுப்பிய தகவலுக்காக அவர் தமக்கு அனுப்பிய ஏற்றுக்கொண்;தான வட்ஸ்எப் செய்தியை இதன்போது நிலந்த ஜெயவர்த்தன ஆணைக்குழுவிடம் காண்பித்தார்.

2019 ஏப்ரல் 20ஆம் திகதி கிடைத்த புலனாய்வு தகவல்களின்படி சஹ்ரான் குழுவினர் ஏப்ரல் 21 அல்லது அதற்கு முன்னதாக தாக்குதல்களை நடத்துவர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக நிலந்த ஜெயவர்த்தன தெரிவித்தார்

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்