திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சரஸ்வதி பூஜை நிகழ்வு

 

 ஹஸ்பர் ஏ ஹலீம்வருடா வருடம் திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் சரஸ்வதி பூஜை நிகழ்வுகள் இன்று(22) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாக கட்டமைப்பின் பிரதான மையமாக உள்ள மாவட்ட செயலகத்தில் இவ்வாறான பல்லினங்களின் சமய முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவது நல்லினக்கத்தை கட்டியெழுப்ப ஏதுவாக அமைவதுடன் மாவட்ட மக்களுக்கு முன்னுதாரணமாகவும் அமையும் என குறிப்பிட்டார்.

சுகாதார நடைமுறைகளை கருத்திற்கொண்டு இம்முறை இப்பூஜை  நிகழ்வுகள் நிகழ்ச்சிகளை மட்டுப்படுத்திக்கொண்டு   நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம். ஏ.அனஸ்,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன்,மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன்,மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்