மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இருவருக்கிடையில் ஏற்பட்ட போட்டியால் நேர்ந்த விபரீதம்


 (க.கிஷாந்தன்)

 

அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் மல்லியப்பு சந்தி பகுதியில் இன்று (12.10.2020) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.  அவர் சிகிச்சைக்காக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

கொட்டகலையிலிருந்து அட்டன் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், அட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற காருடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

 

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இருவருக்கிடையில் ஏற்பட்ட போட்டியால் இருவரும் வேகமாக பயணித்துள்ளனர். இதனையடுத்து இரு சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் ஒரு மோட்டார் சைக்களில் காரில் மோதி விபத்துக்குள்ளானது.

 

இதனால் காரும், மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளன. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தப்பிச்சென்றுள்ளார். பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்