இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசாக் காலம் நீடிப்பு

 




 ( மினுவாங்கொடை நிருபர் )


   இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வௌிநாட்டவர்களினதும் வீசாக் காலம் டிசம்பர் 05 ஆம் திகதி வரை, 60 நாட்களினால் நீடிக்கப்பட்டுள்ளது.
   வீசாக் கட்டணம் மற்றும் வீசாவைப் பெறுவதற்கான காலம் பின்னர் அறிவிக்கப்படும் என, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   வீசாவினைப் பெற்றுக் கொள்வதற்காக, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வீசாப் பிரிவுக்கு சமூகமளிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
   எந்தவொரு வௌிநாட்டவரும் டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வௌியேறினால், விமான நிலையத்தில் வீசாவுக்கான கட்டணத்தை, தண்டப் பணமின்றி செலுத்த வேண்டும் எனவும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்