அனைத்து அருங்காட்சியகங்களும் மூடப்பட்டன

 
 ( மினுவாங்கொடை நிருபர் )


   மத்திய கலாசார நிதியத்தின் கீழுள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
   புத்த சாசன, மத விவகார மற்றும் கலாசார மற்றும் நிதியமைச்சின் கீழுள்ள, மத்திய கலாசார நிதியம் இதனை அறிவித்துள்ளது.
   இது குறித்து புத்த சாசன, மத விவகார மற்றும் கலாசார மற்றும் நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக, மத்திய கலாசார நிதியத்திற்குச் சொந்தமான அனைத்து அருங்காட்சியகங்களையும்  தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
   இதன்படி பொலன்னறுவை, சீகிரியா, கதிர்காமம், காலி, கண்டி ஆகிய பகுதிகளிலுள்ள பிரதான மத்திய கலாசார நிதியத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்