அம்பாறையில் வெப்பக்காற்றுடன் கூடிய காலநிலை பொதுமக்கள் சிரமம்

 பாறுக் ஷிஹான்


வெப்பக்காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக    பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்வதுடன் மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன.

இன்று மாலை   திடீரென்று   மினி சூறாவளி அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, கல்முனை ,நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி ,காரைதீவு ,நிந்தவூர், சம்மாந்துறை ,அக்கரைப்பற்று ,பகுதிகளில் கடும் வெப்பத்துடன்  வீசியது.

இதனால் வீதியால் பயணம் செய்த பொதுமக்கள் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

சில இடங்களில் புழுதியுடன் கூடிய காற்று வீசியதுடன் விளம்பர பலகைகளும் சேதமடைந்தன.

கடற்கரையோரங்களில் உள்ள தென்னைமரங்கள் அகோர காற்றினால் ஓலைகளை இழந்து கொண்டிருந்தன.