ஜனாதிபதி செயலகத்தின் பொதுமக்கள் சேவை தொடர்ந்தும் முன்னெடுப்பு

 
 ( மினுவாங்கொடை நிருபர் )


   கொரோனா வைரஸ் காரணமாக, சுகாதாரப் பிரிவின் ஆலோசனைக்கமைய சில நிறுவனங்களின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி செயலகத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
   கொரோனா வைரஸ் காரணமாக, பொதுமக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தர முடியாததைக் கருத்திற்கொண்டு தொலைபேசி, தபால் சேவை, இணையத்தளம் ஊடாக மக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வழங்கப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் தொலைநகல் (பெக்ஸ்) இலக்கங்களுடன் இணையத்தள முகவரி ஊடாக மக்கள் ஜனாதிபதி செயலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் சேவைப் பிரிவு, ஜனாதிபதி நிதியம் ஆகியவற்றுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
   பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவினைத் தொடர்புகொள்வதற்கு
 0114354550/ 0112354550 
ஆகிய தொலைபேசி இலக்கங்களும் 011 2348855 எனும் பெக்ஸ் இலக்கமும், publicaffairs@presidentsoffice.lk எனும் இணையத்தள முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
   இதனைத்தவிர, குறைகேள் பிரிவிற்கு தொடர்பினை ஏற்படுத்துவதாயின், 
0112338073 
எனும் தொலைபேசி இலக்கமும் ombudsman@presidentsoffice.lk எனும் இணையத்தள முகவரியும் ஜனாதிபதி செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 0112354354 
எனும் தொலைபேசி இலக்கம் ஊடாகவும் 
011 2331243 எனும் பெக்ஸ்  இலக்கத்தினூடாகவும், fundsecretary@presidentsoffice.lk எனும் இணையத்தள முகவரி ஊடாகவும் ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்றும், ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்