ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு ரவிகரன் கண்டனம்

 விஜயரத்தினம் சரவணன்முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் இன்று ஊடகவியலாளர் இருவர் மீதான தாக்குதலை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வன்மையாக கண்டித்துள்ளார்.

முறிப்புப்பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் தேக்குமரங்கள் கடத்தப்படுவதையடுத்து குறித்த இடத்திற்கு நேரில் சென்று உண்மையை உலகுக்கு வெளிப்படுத்த முயன்ற ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன் ஆகியோர் சட்டத்திற்குப் புறம்பான கும்பலால் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் செயற்பாடு தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களிடம் இருந்து உறுதிப்படுத்தியதாகவும் உரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு குறித்த குழுவினர் ஒறுக்கப்படுவதோடு மேலும் அப்பகுதியில் காடழிப்பு தொடராமல் இருப்பதை உறுதி செய்யுமாறு வன இலாகா, காவல் துறையினர் உள்ளிட்டோரை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்