நிதிநிலையியற் குழுக்கூட்ட அறிக்கையை ஆராயும் சபை உறுப்பினர்களுக்கு கடமையுண்டு

 
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)நிதிநிலையியற் குழுக்கூட்ட அறிக்கையை ஆராயும் கடமை    அனைத்து சபை உறுப்பினர்களுக்கும்  உள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தெரிவித்தார்.


கோரானா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார ஒழுங்கமைப்புடன் கல்முனை மாநகர சபையின் 31 மாதாந்த பொதுச் சபை அமர்வு  புதன்கிழமை(28 ) 2.30 மணியளவில்  மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்  தலைமையில் நடைபெற்றபோது  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சபை ஆரம்ப நிகழ்வாக   29.09.2020 அன்று இடம்பெற்ற கூட்டறிக்கையை அங்கீகரித்தல் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் முதல்வரின்  ஒழுங்கமைப்பில் பொதுவசதிகள் மற்றும் நலன்புரிக்கூட்ட அறிக்கை மற்றும்   மாநகர சபை நிதிநிலையியற் குழுக்கூட்டம் தொடர்பில்  ஆராய பட்டதுடன்  இதன்  பொறுப்பு அனைவரிடமும் உள்ளதாக முதல்வரால்  சுட்டிக்காட்டி  ஆராயப்பட்டது.

தொடர்ந்து  சுகாதார திண்மக்கழிவகற்றல் குழுக்கூட்ட அறிக்கை தொடர்பில்  குழுவின் தவிசாளரும் உறுப்பினருமான அப்துல் றஹீம் பஷீறா உரையாற்றியதுடன்    அங்கீகரித்தல் விடயமாக  சபை உறுப்பினர்களிடையே கருத்துக்கள் கேட்கப்பட்டு ஆராயப்பட்டது.
 அத்துடன் இதனை தொடர்ந்து ஏனைய  மாநகர சபை உறுப்பினர்களின் ஒழுங்கு பிரச்சினை மற்றும் முறையீடுகளிற்கான பதிலுடன் சபை அமர்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.