பெலியகொட மீன் சந்தையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று : மீன் வாடிகளின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்

 

 

நூருள் ஹுதா உமர். 


எமது நாட்டில் இரண்டாம் கட்டமாக அதிகளவில் பரவிவரும் கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் வழிகாட்டல் காரைதீவு பிரதேச குழுவின் கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (22) காலை இடம்பெற்றது.  

இதன் போது தற்போது நாட்டில், குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் 
பெலியகொட மீன் சந்தையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தோற்றுநிலைகளில் காரைதீவு , மாளிகைக்காடு மீன் வாடிகளின் சமகால நிலைமைகள் தொடர்பிலும், எதிர்வரும் கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன. அத்துடன்.  இக்கூட்டத்தில் கொரோனாவை காரைதீவு பிரதேசத்தில் கட்டுப்படுத்தல் தொடர்பிலும் இக்குழுவினால் பல  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். ஜீவராணி,  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத், காரைதீவு உதவி பிரதேச செயலாளர்  எஸ்.பார்த்திபன்,பிரதேச சபை செயலாளர் மற்றும் ஏனைய கொரோனா கட்டுப்படுத்தல் வழிகாட்டு குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டு கொண்டனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்