அம்பாறையில் சுகாதார வழிகாட்டல்களுடன் புலமைப் பரிசில் பரீட்சை நிறைவு

 பாறுக் ஷிஹான்


நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி   5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை  நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

  அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை சம்மாந்துறை   அக்கரைப்பற்று  கல்வி வலயங்களிலும் இன்று(10)  இப்பரீட்சை நடைபெற்று நிறைவடைந்துள்ளதுடன் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வெளியேறிச்சென்றதை காண முடிந்தது.

அத்துடன் கல்முனை சம்மாந்துறை வலயப்பகுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் முகக்கவசம் அணிந்து கைகளை கழுவி பரீட்சை நிலையத்திற்கு பெற்றோருடன் வருகை தந்திருந்தனர்.

மேலும் பரீட்சை நிலையங்களுக்கு சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் வருகை தந்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 சகல பரீட்சை நிலையங்களிலும்  பிராந்திய சுகாதார பிரிவினர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை தந்ததுடன்  கைகள் தூய்மைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்