மாங்குளம் சந்தியில் அரசு பேருந்து விபத்து!

 
விஜயரத்தினம் சரவணன்முல்லைத்தீவு மாங்குளம் சந்தி பகுதியில் அரசு பேருந்து ஒன்று 03.10 இன்று (சற்று முன்னர்) விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசபேரூந்தானது வீதியைவிட்டு விலகிச்சென்றதனாலேயே குறித்த விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேரூந்தானது கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி, வீதியின் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிறிய மகிழூந்து மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றுடன் மோதியதுடன், அதனையடுத்து அருகிலிருந்த பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அத்தோடு பேரூந்து சாரதிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவினாலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சம்பவ இடத்திலிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் காயமடைந்ததுடன், பேரூந்து மற்றும், வீதியின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய மகிழூந்து, முச்சக்கரவண்டி என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்த பயணி, மற்றும் உடல் நலம் குறைவுற்றிருந்த பேரூந்துச் சாரதி ஆகியோர் மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பில் மாங்குளம் போலீசார் மேலதிகவிசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்