டயகம - அக்கரப்பத்தனையில் ஒருவருக்கு கொரோன வைரஸ் தொற்று உறுதி

 


 (க.கிஷாந்தன்)

 

அக்கரப்பத்தனை, ஆக்ரோ பகுதியில் உள்ள ஒருவருக்கும் கொரோன வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐந்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவருடன் தொடர்பை பேணியவர்கள் விபரமும் திரட்டப்பட்டு வருகின்றன.

 

பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரியும் இவர் அண்மையில் வீடு திரும்பியுள்ளார். சில இடங்களுக்கு சென்று வந்தும் உள்ளார்.

 

பேரியகொடை கொத்தணி பரவலையடுத்து இவரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெறுவதற்கான நடவடிக்கையை சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டிருந்தனர். பரிசோதனை முடிவு இன்று (27) வெளியானது. அதில் வைரஸ் தொற்று உறுதியானது.

 

இதன்பின்னர் அக்கரப்பத்தனை நகரம் தற்காலிகமாக மூடப்பட்டு தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு தொற்றுநீக்கம் செய்யப்பட்டது. பிரதேச சபைத் தலைவர் கதிர்ச்செல்வனின் ஆலோசனையின் பிரகாரம் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

 

அதேவேளை. லிந்துலை பகுதியிலும் பலரிடம் பீசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று பெறப்பட்டன.

 

கொழும்பில் இருந்து வருபவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தகவல்களை வழங்கவேண்டும் எனவும், வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பிலும் விழிப்பாகவே இருக்கவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

 

அத்துடன் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறும் மக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்