கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை படகுகளுக்கு வரி;மீனவர்கள் எச்சரிக்கை!

 விஜயரத்தினம் சரவணன்


முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபை மீன்பிடிப் படகுகளுக்கான வரிஅறவீட்டினைச் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளது.

இந் நிலையில் பிரதேசசபையில் குறித்த மீன்பிடிப் படகுகளுக்கான வரி அறவீடுதொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் 07.10 புதன் அன்று, வட்டுவாகல் தொடக்கம் சிலாவத்தை வரையான ஒன்பது மீனவ சங்கங்களுக்கும், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமேளனத்திற்கும் கரைதுறைப்பற்று பிரதேசசபை கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது.

குறித்த கலந்துரையடலில் மீனவர்கள் படகுகளுக்கு வரி அறவீடு செய்யவேண்டாம் என வலியுறுத்தியிருந்தனர்.
வரி வழங்க மறுத்தால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி வரி அறவிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பிரதேசசபைத் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கலந்துரையாடலில் இருந்து வெளியேறிய மீனவர்கள், உரிய அதிகாரிகளுடன் இதுதொடர்பில் பேசவுள்ளதாகவும், அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீனவர்களைத் திரட்டி கரைதுறைப்பற்று பிரதேசசபைக்கு எதிராக பாரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவும் தாம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.