ஈஸ்டர் தாக்குதல்: பிரதான சூத்திரதாரி சஹ்ரான் அல்ல!

 


 

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் அல்ல என்றும் நௌபர் மௌலவியே பிரதான சூத்திரதாரி என்று தேசிய புலனாய்வு சேவைகளின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தன ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளார்.

மேலும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 14 முக்கியஸ்தர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டது என்றும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்று முன்தினமும் நேற்றும் சாட்சியம் அளித்த அவர் தெரவித்த முக்கிய விடயங்கள் வருமாறு,

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார, முன்னாள் பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்ன, கருணசேன ஹெட்டியாராச்சி மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் சி.ஐ.டி. பணிப்பாளர் சிசிர மெண்டிஸ், பயங்கரவாத தடுப்பு பொலிஸ் பிரிவு பணிப்பாளர் நாலக டி சில்வா, பிரிகேடியர் சுலா கொடிதுவக்கு, சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டது.

இதேவேளை, இந்த முக்கியஸ்தர்கள் 14 பேரும் வரும் நாட்களில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியம் அளிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் காசிம் பிரதான சூத்திரதாரி அல்ல.

19 வருடங்களாக கட்டாரில் வசித்து சர்வதேச தொடர்புகளை பேணி வந்த நௌபர் மௌலவியே இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்தத் தாக்குதல் குறித்து 10 மாதங்களுக்கு முன்னமே குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிசிர மெண்டிஸிடம் தாம் எச்சரித்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்