மருந்தகங்கள், உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள் திறக்கும் தினங்கள் அறிவிப்பு

 

 



( மினுவாங்கொடை நிருபர் )

 
   ஊரடங்கு வேளையில், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
   மாவட்ட ரீதியில், வாரத்தில் இரு நாட்களில் முற்பகல் 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, இவ்வாறு மருந்தகங்கள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
   இதன்பிரகாரம், கம்பஹா மாவட்டம்
ஒவ்வொரு திங்கட்கிழமை  மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களிலும்,
   கொழும்பு மாவட்டம்
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும்,
   களுத்துறை மாவட்டம்
ஒவ்வொரு திங்கட்கிழமை  மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
   இதேவேளை, குருநாகல் மாவட்டம்
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்