பிரான்சில் இருந்து அனைத்து இஸ்லாமிய குழுக்களையும் விரட்டுங்கள்! வலுக்கும் போராட்டம்

 


நேற்று நீஸ் நகர தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, அரசியல் தரப்பினரிடையே பலத்த கோபத்தினை இது ஏற்படுத்தியுள்ளது.

 
தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மரீன் லூ பென் இது குறித்து தெரிவிக்கும் போது, “பிரான்சில் இருந்து அனைத்து இஸ்லாமிய குழுக்களையும் விரட்டவேண்டும்!” என குறிப்பிட்டார்.
 
குறிப்பாக UOIF அமைப்பினை (பிரான்சில் இஸ்லாமிய சங்கம். - Union of Islamic Organizations of France) அடியோடு இல்லாதொழிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இஸ்லாமியர்களால் இயக்கப்படும் அனைத்து அமைப்புக்கள், அவர்களின் கலாச்சார நிகழ்வுகள், ஒன்றியங்கள், விளையாட்டு அமைப்புகள், நல்லின அமைப்புக்கள் என அனைத்தையும் பிரான்சில் இருந்து அடியோடு அழிக்க வேண்டும் என மரீன் லூ பென் தெரிவித்தார்.
 
தவிர, இஸ்லாமிய அமைப்புகளிடம் உள்ள அனைத்து சொத்துக்கள், நிலங்களையும் கட்டாயமாக மீட்கவேண்டும் எனவும் மரீன் லூ பென் குறிப்பிட்டார்