ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லையில் திரண்ட வடக்கு ஊடகவியலாளர்கள்
 விஜயரத்தினம் சரவணன்முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன் ஆகியோர் கடந்த 12.10.2020 திங்களன்று முல்லைத்தீவு முறிப்புப் பகுதியல் மரக்கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டிருந்தனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 15.10.2020 இன்றையநாள் வடமாகாணத்தின் சகல மாவட்டங்களைச் சேர்ந்த ஊடவியலாளர்களும் ணைந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அளவில் ஆர்ப்பாட்டப் பேரணிஒன்றினை முன்னெடுத்திருந்ததுடன், அவர்களால் மகஜர்களும் கையளிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக குறித்த எதிர்ப்பு ஆர்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரவித்து பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன், எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளோடு, மரக்கன்றுகள், மற்றும் மரக்கிளைகளைத் தாங்கியவாறு ஊடவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்து பேரணியாக முல்லைத்தீவுமாவடட போலீஸ் அத்தியட்சகர் அலுவலகம்வரைசென்று அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் அத்தியட்சகரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன், அவரிடம் மரக்கன்று ஒன்றும் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்து மாவட்டசெயலகம்வரை சென்று மாவட்டசெயலரின் பிரதிநி ஒருவரிடம் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டதுடன், மரக்கன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து முள்ளியவளையில் அமைந்துள்ள முல்லைத்தீவுமாவட்ட வன அலுவலகம்சென்று அங்கும் இதுதொடர்பில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவளிக்கும்வகையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர்களான தி.இரவீந்திரன், சி.லோகேஸ்வரன் ஆகியோரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்