வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு வறிய குடும்பத்துக்கு வீடு

 

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)ஜனாதிபதியின் வழிகாட்டலில் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு சௌபாக்கியா  வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி பெறும் வறிய குடும்பத்திற்கு 02 இலட்சம்  ரூபா பெறுமதியில் வீடு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு  இன்று  இடம்பெற்றது. 

நாவிதன்வெளி பிரதேச செயலக சொறிக்கல்முனை - 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி நிவாரணம் பெறும்  குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட  குடும்பத்திற்கு இவ்வீடு அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது. 

நாவிதன்வெளி பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் சமூர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.தமிழ்வாணன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.புஷ்பாவதி உட்பட  அலுவலர்க உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்