சுகாதார அமைச்சருக்கு "பொறுப்பின்மை" என்ற நோய் - மனோ கணேசன்

 

 நூருள் ஹுதா உமர் 


"பாராளுமன்றம் 'பப்ளிக் பிளேஸ்' இல்லை. ஆகவே இங்கே அந்த சட்டம் செல்லுபடியாகாது" எனக் கூறும் சுகாதார அமைச்சருக்கு கொரோனாவை விட பெரும் நோய் தலையில் ஏற்பட்டுள்ளதா? அந்த நோயின் பெயர் பொறுப்பின்மையா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். 

இன்று பாராளுமன்ற அமர்வில் நடைபெற்ற சுகாதார நிலைகள் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித்துக்கும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சி க்குமிடையே நடைபெற்ற விவாதம் தொடர்பில் தனது சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 

மேலும் அந்த அறிக்கையில் 

பாராளுமன்றத்தில், எம்பிக்கள் அருகருகே அமர வைக்கப்படுவதால், ஒரு மீட்டர் இடைவெளி நபர்களுக்கு இடையே  இருக்க வேண்டும் என்ற நாட்டு சட்டம், சபையில் 
கடைபிடிக்கப்படுவதில்லையே எனக் கேட்டால், சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி, இது பப்ளிக் பிளேஸ் இல்ஸை என பதிலளிக்கிறார்.

ஆனால் கொரொனாவுக்கு, எது பப்ளிக் பிளேஸ், எது பப்ளிக் பிளேஸ் இல்லை என்று தெரியாதே என குறிப்பிட்டுள்ளார். 

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்