காணாமல் போயுள்ள மீனவர்கள் இடர்பாடுகளின்றி கரை திரும்பவேண்டும்

 

Vijayaraththinam saravanan 

முல்லைத்தீவு - மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவில் கடலுக்குச் சென்றநிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை. இந் நிலையில் அவர்களைத் தேடி பத்தொன்பது படகுகளில் மீனவர்கள் 21.10.2020 இன்றையநாள் புறப்பட்டுள்ளனர்.


இந் நிலையில் குறித்த பகுதிக்குச் சென்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்  மீனவர்களிடம் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இவ்வாறு காணாமல் போயுள்ள மீனவர்கள் எவ்வித இடர்பாடுகளுமின்றி, கரைதிரும்பவேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் - என்றார்.