மேல் மாகாணத்திற்குள் உட்பிரவேசித்தல், வெளியேறுதல் தடை, வைபவங்களை நடத்துவதற்கும் தடை, தேவையற்று நடமாடினால் சட்ட நடவடிகை

 
 ( மினுவாங்கொடை நிருபர் )


   தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதியில், மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பதற்கு அல்லது அங்கிருந்து வெளியேறுவதற்கு முழுமையாகத் தடை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
    பொலிஸ் தலைமையகத்தில் (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,  தனிமைப்படுத்தல் சட்ட காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தி மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கவோ அல்லது வெளியேறவோ முடியாது.
  வியாழக்கிழமை (29) நள்ளிரவு 12 மணி முதல், மேல் மாகாணத்தில் 112 பொலிஸ் பிரிவுகளின் கீழ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, குளியாப்பிட்டிய பிரதேசத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குச் சட்டம் திங்கட்கிழமை (02) காலை 5  மணியுடன் நிறைவடைகின்றது. இருப்பினும், புதிதாக பொலிஸ் ஊரடங்கு ஆரம்பமாகும் பொலிஸ் பிரிவுகளுக்கு  மாத்திரமே ஆகும்.
68 பொலிஸ் பிரிவுகளில் அதேபோன்று ஊரடங்குச் சட்டம் இடம்பெறும். இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் எந்த வகையிலும் மேல் மாகாணத்தில் இருந்து  வெளியிடங்களுக்குச் செல்வதற்கோ அல்லது மேல் மாகாணத்திற்குள் வருவதற்கோ எவருக்கும் வாய்ப்பில்லை.
   மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில்களும் அமைந்துள்ள இடங்களில்  பொலிஸார், வீதித் தடைகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த வீதித் தடைகள், வியாழக்கிழமை நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும்.
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் மேல் மாகாணத்தில், அதிவேக நெடுஞ்சாலையும் உள்ளடங்குகின்றது. இந்த வீதி ஊடாக மேல் மாகாணத்திற்கு வருவதற்கும், மேல் மாகாணத்தில் இருந்து வெளியே செல்வதற்கும் எந்த வாகனத்திற்கும் அனுமதியில்லை.
   திடீர்  விபத்துக்கள் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். விசேடமாக, அத்தியவசிய சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தமது கடமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். இதைத் தவிர, வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
   இதேவேளை, முன்னர் திட்டமிடப்பட்டிருந்த திருமண வைபவங்கள் அல்லது வேறு எந்த வைபவங்களையும் ஊரடங்குச் சட்ட காலப்பகுதியில் நடத்தப்படுவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
   ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதிக்குள் பல்வேறு வைபவங்கள் தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது. பொதுமக்கள் ஒன்று கூடுதல், மண்டபங்களில் மக்கள் ஒன்று கூடுதல் என்பன, இந்தக் காலப்பகுதியில் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்