அத்தியவசிய சேவையாளர்கள் அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்கு பயன்படுத்த முடியும்

 




 ( மினுவாங்கொடை நிருபர் )


   அத்தியவசிய சேவைப் பணியாளர்கள், ஊரடங்கு வேளையில் பயணிக்கும் போது தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காகப் பயன்படுத்தலாம் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
   இதன்படி, சுகாதார சேவைகள், விமான நிலையம், வெளிவிவகார அமைச்சு, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் வெகுஜன ஊடகம் ஆகிய துறைகளில் பணி புரிவோரே தமது அலுவலக அடையாள அட்டைகளை ஊரடங்கு வேளை அனுமதிக்குப் பயன்படுத்த முடியும்.
 எவ்வாறாயினும், அவர்கள் தங்கள் பணியிடத்துக்குச் செல்லும் போதும் வெளியேறும் போதும், கொவிட் - 19 சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளை  கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்