சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத்துக்கு தே.கா தலைவர் அதாஉல்லா பொன்னாடை போத்தி கௌரவிப்பு

 
நூருல் ஹுதா உமர்


அண்மையில் அமெரிக்க தமிழ் பல்கலைக்கழகத்தில் கௌரவ கலாநிதி பட்டம் பெற்ற சிலோன் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான றியாத் ஏ மஜீத் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று இன்று காலை சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க காரியாலயத்தில் நடைபெற்றது.

தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் பொன்னாடை போத்தி கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது ஜும்மாபள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா, செயலாளர் ரோஷன் மஜீத், பொருளாளர் ஏ.ஏ.சலீம், சிலோன் மீடியா போரத்தின் பொருளாளரும் தேசிய காங்கிரஸின் மாளிகைக்காடு அமைப்பாளருமான நூருல் ஹுதா உமர், சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம், பல்நோக்கு கூட்டுறவு சங்க இயக்குனர் மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்