முல்லையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கள் வழங்கிவைப்பு

 

 


விஜயரத்தினம் சரவணன்தற்போது நிலவும் கொரோனா அவசரநிலையைக் கருத்திற்கொண்டு, வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, முல்லைத்தீவு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட, 16பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

உலகவங்கியின் நிதி உதவியில், மத்திய சுகாதார அமைச்சினால் குறித்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வானது 31.10.2020 இன்றையநாள் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டசெயலர் க.விமலநாதன், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் த.காண்டீபன், மத்திய சுகாதார அமைச்சிலிருந்து வருகைதந்த அதிகாரிகள் மற்றும், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிமனை அதிகாரிகள் இணைந்து பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கிவைத்தனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்