ஹெரோயினை சூட்சுமமாக கடத்திய இளைஞன் இராணுவத்திரால் கைது


பாறுக் ஷிஹான்

ஹெரோயினை சூட்சுமமாக கடத்திய இளைஞனை    இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைபள்ளி வீதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் நடமாடிய 29 வயதுடைய இளைஞனை சனிக்கிழமை(3) இரவு வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் சோதனை செய்தனர்.

இதன் போது குறித்த இளைஞன் வருகை தந்த மோட்டார் சைக்கிளின் ஆசனத்தின் கீழ் தீப்பெட்டி ஒன்றில் மறைத்து சிறு பொதி செய்யப்பட்ட ஹெரோயின் பக்கெற்றுக்கள் மீட்கப்பட்டதுடன் விசாரணையை முன்னெடுத்த பின்னர் குறித்த இளைஞனின் வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.

கல்முனை-2 கடற்கரைப்பள்ளி வீதியை சேரந்த 29 வயதுடைய குறித்த இளைஞனினிடம் இருந்து 10 மில்லிகிராம் மற்றும் மாவா தூள் 30 கிராம் என்பன கைப்பற்றப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கைதான சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.