பிரான்ஸ் : நிரம்பி வழியும் மருத்துவமனைகள், சிகிச்சை வழங்குவதில் நெருக்கடி!

 இல் து பிரான்சுக்குள் கொரோனா வைரஸ் தொடர்ந்தும் வேகமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

 
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, இல் து பிரான்சுக்குள் உள்ள மருத்துவமனைகளில் 73% வீதமான 'அவசரப் பிரிவு கட்டில்கள்' நிறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் திங்கட்கிழமை 771 பேர் (68.8%) தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை நேற்று 818 பேராக (73%) அதிகரித்துள்ளது. 
 
நேற்று பிரான்சில் 292 பேர் சாவடைந்திருந்த நிலையில், அவர்களில் 64 பேர் இல் து பிரான்சுக்குள் சாவடைந்துள்ளனர். இல் து பிரான்ஸ் மருத்துவனனைகளில் முன்னதாகவே பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில்,  தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள் வேகமாக நிரம்பி வருகின்றமை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 
 
பல ஆயிரக்கணக்கான சத்திரசிகிச்சைகள் பிற்போடப்பட்டுள்ள நிலையில், அவை மேலும் பல மாதங்கள் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்