புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களை நாளாந்தம் 9 மணி நேரம் திறக்க நடவடிக்கை

 




 ( மினுவாங்கொடை நிருபர் )


   புறக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள மொத்த வர்த்தக நிலையங்களை, நாளாந்தம் காலை 5.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
   அதற்கமைவாக, 28 முதல் அங்கு வர்த்தக நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாகவும்,  வியாபாரிகள் கணிசமான அளவு பொருட்களைக் கொள்வனவு செய்ய வந்திருந்ததாகவும், புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
   நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் 50 சதவீத ஊழியர்களைப் பணியில் ஈடுபடுத்தி மொத்த வர்த்தகம் இடம்பெற்று வருகிறது.
   அத்துடன், சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் சுகாதாரப் பாதுகாப்புடன் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது.
   தட்டுப்பாடின்றி அனைத்து அத்தியவசியப் பொருட்களும் புறக்கோட்டை மொத்த வர்த்தகச் சந்தையில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்