அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பொலிஸ் பகுதிகளில் 6 க்கும் அதிகமான துப்பாக்கிகள் மீட்பு

 

 

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)  


அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பொலிஸ் பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சுமார் 6 க்கும் அதிகமான துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கண்ணகிபுரம்  பகுதியில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த சொட்கண் துப்பாக்கிகள் நேற்றும்(19) இன்றும் (20) மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட இவ்விரு துப்பாக்கிகளில் ஒன்று இங்கிலாந்து நாட்டு தயாரிப்பு என  அக்கரைப்பற்று பொலிசார் குறிப்பிட்டனர்.

இதே வேளை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சினங்குடா பகுதியில் இராணுவத்தினருக்கு இன்று(20) காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் உரப்பை மற்றும் மலைகளுக்குள்   மறைத்து வைத்திருந்த சொட் கண் துப்பாக்கிகள்    மீட்கப்பட்டு திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதன் போது துப்பாக்கி மீட்பு சம்பவத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் அக்கரைப்பற்று  கண்ணகிபுர பகுதியில் இன்று மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில்    43 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்