4 மணி நேரத்துக்கு மாத்திரமே ஒரு முகக் கவசத்தை அணியலாம்

 

 


ஒரு முகக்கவசத்தை ஆகக்கூடியது 4 மணித்தியாலத்துக்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும். அதன்பின்னர் புதிய முகக்கவசத்தை அணிவது அவசியமென சுகாதார மேம்பாடு அலுவலகத்தின் சமூக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சுகாதார மேம்பாடு அலுவலகத்தின் சமூக சுகாதார பிரிவின் விசேட வைத்தியர் உத்பலா அமரசிங்க மேலும் கூறியுள்ளவை வருமாறு:

“தொழில் நிமித்தம் வெளியில் செல்வோர் அல்லது வேறு தேவைகளுக்காக வெளியே செல்வோர் ஒரு முகக்கவசத்தை 4 மணித்தியாலமே பயன்படுத்த வேண்டும்.

எனவே, வெளியே செல்லும் போது, மேலதிகமாக 2 முகக்கவசங்களை கொண்டு செல்லுவது சிறந்தது. அதன்பின்னர், புதிய முகக்கவசத்தையே கட்டாயம் அணிய வேண்டும். மேலும் முகக்கவசங்களை ஆங்காங்கே வீசுவதனாலும் கொரோனா தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

முகக்கவசங்களை அணியும் போது மூக்கு, வாய் என்பவற்றை நன்றாக மூடும் வகையில்அணிய வேண்டும்” என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்