பதுளை மற்றும் தியத்தலாவ பகுதிகளில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

  


பதுளை மற்றும் தியத்தலாவ பகுதிகளில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், நகரப்பகுதிகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது.


பதுளை, பண்டாரவளை, தியத்தலாவை மற்றும் ஹப்புத்தளை ஆகிய நகரங்கள் (25) இன்று வெறிச்சோடி காணப்பட்டன. வாராந்த சந்தைகளும் மூடப்பட்டிருந்தன.

பதுளை ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள வாராந்த சந்தை நடவடிக்கை இடம்பெற்றாலும் சன நடமாட்டம் இருக்கவில்லை,  சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்று பொது சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்