ஈஸ்டர் தாக்குதல் தினத்தில் 25 தாக்குதல்கள் நடத்த திட்டம்

 


ஈஸ்டர் தாக்குதல்  தினத்தில் 25 தாக்குதல்கள் நடத்தப்பட திட்டம் வகுக்கபட்டதாக தெரிவித்த  குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஷானி அபேசேகர, எனினும் புலனாய்வு தகவல்கள் மூலமாக அவை முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் தாஜ் சமூத்திரா ஹோட்டலில் குண்டுதாரியொருவர் 2 , 3 தடவைகள் குண்டை வெடிக்க வைப்பதற்காக முயற்சிப்பது தொடர்பான  சீ.சீ.ரீ.வி வீடியோ பதிவுகள் இருக்கின்றன. அந்த குண்டு தொழிநுட்ப கோளறு காரணமாக வெடிக்காது போயிருக்கலாம். 

அதன் பின்னர் அந்த நபர் தெஹிவளையில் ஹோட்டல் அறைக்குள் அந்த கோளரை பரிசோதிக்க முயற்சித்த போது அது வெடித்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்