ஒரு இலட்சம் வேலைத் திட்டத்தில் தம்பலகாமத்தில் 21 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு

 
 ஹஸ்பர் ஏ ஹலீம்_


குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சார்ந்தவர்களில் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் தம்பலகாம பிரதேச செயலகப் பிரிவில்  முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட  21 பேருக்கு நியமனங்கள் இன்று (26) வழங்கப்பட்டது

தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடை பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான   கபில நுவான் அத்துகோரல  அவர்களினால் குறித்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், நிர்வாக உத்தியோகத்தர் B.யு.B.எல் உடகெதர மற்றும் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான தம்பலகாமம் பிரதேச செயலக  அதிகாரி எம்.முர்ஷித் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்